கோயம்புத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், கொரோனா தொற்று பாதிப்பால்கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், அவரது மனைவி ரீட்டா ஆகியோர் தொற்று பாதிப்புக்குள்ளாகி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் ஓய்வெடுத்து வருகின்ற னர்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், அவரது கணவர் டாக்டர் தி.சுந்தரராமன் இருவரும் தொற்று பாதிப்புக்குள்ளாகி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.