tamilnadu

img

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்தனர்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில், இராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் சில நாட்களுக்கு மன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த, விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் 4 பேர் மற்றும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 7 பேர் குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இன்னும் 9 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  குணமடைந்து வீடு திரும்பியர்வகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் கள் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.