விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் கடந்த பல நாட்களாக செய்து வருகின்றனர். மலைப்பட்டி நல்ல குற்றாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.திருமலை, நகரச் செயலாளர் வி.ஜெயக்குமார், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்ட துணைத் தலைவர் ரேணுகா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.