மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூன் 16- கொரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்ட தொழிலாளர் குடும்பங் களுக்கு மத்திய, மாநில அரசுகள் மாதம் ரூ.7500 நிவாரணத் தொகை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் செவ்வாயன்று அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊர டங்கு உத்தரவு நீட்டிக்கப்பட் டுள்ளது. இதனால் பாதிக்கப்பட் டுள்ள தொழிலாளர் குடும்பங் களுக்கு மத்திய, மாநில அரசுகள் மாதம் ரூ.7500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தனி யார் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை கேட்டு பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது. மின் கட்டண கணக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் கடைபிடிக் கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரிசிக்கடை வீதியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பிர் கே. தங்க வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால், தெற்கு மாநகரச் செயலா ளர் டி. ஜெயபால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். அவிநாசியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில் ஒன்றிய செய லாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தாரா புரத்தில் மேகவர்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு தாலுகாவில் 13 மையங் களிலும், ஈரோடு நகரத்தில் 2 மையங்களிலும், பவானியில் 3 மையங்களிலும், சத்தியில் 6 மையங் களிலும், கோபியில் 10 மையங் களிலும், மொடக்குறிச்சி உச்சியில் 4 மையங்களிலும், பெருந்துறையில் 8 மையங்களிலும், அந்தியூர், கடம்பூர் மலை மற்றும் கொடுமுடி, பவானி சாகர் என மொத்தம் 49 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயலாளர் வி.ஏ பாஸ்கரன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஏரியா கமிட்டி செய லாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மையங்களில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தருமபுரி நகரத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களில் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கிரைஸாமேரி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெயா, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி ஒன்றியத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒன்றிய செயலாளர் என். கந்தசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.மாதை யன், கே. பூபதி, மீனாட்சி, ஜி. வெங் கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் மாவட்டச் செயலாளர் ஏ.கு மார், ஒன்றிய செயலாளர் ஆர்.மல் லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, ஏ.நேரு, கே.என். ஏழுமலை, எஸ்.கே.கோவிந்தன், வேடியப்பன், இ.கே.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டச் செயலாளர் சி.வஞ்சி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சேகர் உட்பட பலர் கலந்து கொண் டனர். நல்லம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் வட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொரப்பூரில் ஒன்றிய செயலாளர் கே. தங்கராசு தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் சி. வேலாயுதம் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். காரிமங்கலத்தில் ஒன்றிய செய லாளர் பி.ஜெயராமன் தலைமை யிலும், பாலக்கோட்டில் வட்டச் செய லாளர் ஜி. நக்கீரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்தி ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசி னர். பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் விசுவநாதன், முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பி இளங்கோவன், நகரச் செயலாளர் எஸ். வெள்ளியங்கிரி, பகுதிகுழுச் செயலாளர்கள் கே.அன்பு, சக்தி வேல், ஒன்றியக்குழு செயலாளர் என்.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.சிவா, ரவி, முருகே சன், குமார், உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளிபாளையம் வடக்கு, பள்ளிபாளையம் தெற்கு , திருச்செங் கோடு ஒன்றியம், திருச்செங்கோடு நகரம், எலச்சிபாளையம், ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, சேந்த மங்கலம், புதுச்சத்திரம், பரமத்தி வேலூர் ஆகிய இடைகமிட்டிகளை உள்ளடக்கிய 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெரு மாள், ஏ.ஆதிநாராயணன், பி.ஜெய மணி, கே. தங்கமணி, சு.சுரேஷ் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட் பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
கோவை
கோவை காந்திபுரத்திலுள்ள மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அஜய்குமார், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகிர், மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல், மாவட்டத்தின் பல்வேறு பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயலாளர் வி்.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட் டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.