tamilnadu

img

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:
அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை மத்திய அரசுபறிக்கக்கூடாது. தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலுள்ள முஸ்லிம்சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி விருதுநகர் மாவட் டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலமஸ்தான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச்செயலாளர் அர்ஜூனன், நகர் செயலாளர் மாரியப்பன், மனிதி அமைப்பினர், அன்னை தெரசா நற்பணி மன்றத்தினர்காயிதே மில்லத் ஆட்டோ சங்கத்தினர்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூமாப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் எம்.ஜி. ராமசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.

மதுரை
மதுரையில் சுயராஜ்யபுரம், தைக்கால் தெரு, டிவிஎஸ் நகர், ஜீவா நகர், கார்க்கி படிப்பகம், அண்ணாநகர், புதூர் பேருந்து நிலையம், நெல்பேட்டை, தெற்கு வாசல் உள்ளிட்ட 13 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.நன்மாறன், செயலாளர் கே.அலாவுதீன், பொருளாளர் எம்.ஜான்சன், எஸ்.எம்.லூர்து, பி.ரசூல், யு.எஸ். அபுதாகீர், ஜெ. எகியா, எஸ்.எம். ஷரீப், என்.முகமது அலி ஜின்னா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகர் ஆவுடையாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லியாகத் அலி, ஜமா-அத் தலைவர் ஜபர் மரைக்காயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, கே.ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.