tamilnadu

மதுரை மற்றும் விருதுநகர் முக்கிய செய்திகள்

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத்தை ஒப்படைக்க நடவடிக்கை

மதுரை, ஜூன் 1- ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத்தை திரும்பத் தருகிறது தெற்கு ரயில்வே. கொரோனா வைரஸ் தொற்று காரண மாக 22.3.2020 முதல் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு பதிவு செய்தோர் www.irctc.co.in என்ற இணையதளம் வாயிலாக ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள் ளலாம். பயணச்சீட்டுகளை ரயில் நிலையங்க ளில் பதிவு செய்தவர்கள் பயணநாளில் இருந்து 180 நாட்களுக்குள் பயணக் கட்ட ணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பயணிகள் ரயில் நிலையத்தில் பயணக்கட்ட ணத்தை திரும்பப்பெற அவசரம் காட்ட வேண்டாம்.  முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில் களுக்கான பயணக் கட்டணத்தை திரும்ப வழஙகுவதற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் ஏற்பாடு செய்து வருகிறது.

விருதுநகர் கொரோனா தொற்று 139 ஆக உயர்வு

விருதுநகர், ஜூன் 1- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி, சுகாதார ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. இந்த நிலையில், சின்னப் பேராலி கிராமத்தைச் சேர்ந்த கூட்டுறவு மேலாளர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் சென்னை சென்று திரும்பி னர்.  இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து  அதே கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில், சின்னப் பேராலியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி மற்றும் 41 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.  விருதுநகர் அல்லம்பட்டி பகு தியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவர் ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை செய்து வந்துள்ளார். இவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.