விருதுநகர்
தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்து அதிக கொரோனா பரவலை பெற்றுள்ள விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 100-க்கு மேல் உள்ளது.
குறிப்பாக இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை முதல் வரும் 19-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகள் மூடப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே விருதுநகரின் நகர் பகுதியான அல்லம்பட்டி மற்றும் முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.