tamilnadu

img

நிவாரணம் வழங்க கோரி சிஐடியு - வாலிபர் சங்கத்தினர் கோஷமிடும் போராட்டம்

விருதுநகர்:
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கொரோனா நிவாரண நிதி வழங்கிடக் கோரி விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான  இடங்களில்  வீடுகளில் இருந்தபடியே சமூக இடைவெளியை பின்பற்றியபடி சிஐடியு மற்றும் வாலிபர் சங்கத்தினர் கோஷமிடும் போராட்டம் நடத்தினர்.

 தமிழக அரசு நலவாரியத்திற்கு  அறிவித்த,  கொரோனா நிவாரண நிதியை உடனடியாக   தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.   பணியில் ஈடுபட்டுள்ள மருத்தவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வீட்டில் இருந்தபடியே கோஷமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் தலைமையில் சிஐடியு தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சிவகாசியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா தலைமையிலும், விருதுநகர் கச்சேரி சாலையில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன், வழக்கறிஞர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசி ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி தலைமையிலும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் தலைமையிலும் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாத்திமாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், நகர்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். வி.எம்.சி காலனியில் நகர் செயலாளர் பி.கருப்பசாமி, நகர் தலைவர் தீபக், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர்  உட்பட பலர் பங்கேற்றனர்.

திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் நகரில் நம்பி நாயுடு, பெருமள்சேரி , இடையபொட்டல் , ஆராய்ச்சிபட்டி, மேட்டுத்தெரு உள்ளிட்ட 10 இடங்களில் தோழர்கள் வீடுகளில் 10 நிமிடங்கள் முழக்கமிட்டனர் .போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை ,சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி ,மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகா தேவி ,சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் சிஐடியூ நிர்வாகிகள் சிபிஎம் நகர்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

வத்ராயிருப்பு ஒன்றியத்தில் ராமசாமி யாபுரத்தில் வீடுகள் முன்பு கொடிகள் ஏந்தி  முழக்கமிட்டனர். போராட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் மணிக்குமார் சிஐடியு நிர்வாகிகள் பழனிச்சாமி சின்ன ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் அச்சம் தவிர் தான் ,அத்திகுளம், கொத்தங்குளம், கிருஷ்ணன்கோவில், சூடி புதூர் உட்பட 11 இடங்களில்  வீடுகளில் கொடியேந்தி முழக்கமிடப்பட்டது.  போராட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார் சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி ,வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை நிர்வாகி முனீஸ்வரன் உள்பட கட்சி கமிட்டி உறுப்பினர்கள் சிஐடியூ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் நான்கு இடங்களில்  கொடிகளை ஏந்தி முழக்கமிட்டனர் .போராட்டத்தில் கட்சி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ,மாதர் சங்க நிர்வாகி முத்துலட்சுமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர் .  ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் 12 இடங்களில்  வீடுகளில் கொடிகளுடன் முழக்கமிட்டனர் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராமர் ஒன்றிய செயலாளர் தங்கவேல், சேத்தூர் நகரச் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் நகரில் மலையடிப்பட்டி கட்சி அலுவலகம் உள்பட 5 இடங்களில்  வீடுகளில் கொடியேந்தி முழக்கமிட்டனர். போராட்டத்தில் கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் ,கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரசாந்த் ,சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மாதர் சங்க நகர செயலாளர் மேரி,  வாலிபர் சங்க நகர தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்