கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள ராணுவத்தின் தலைமையகமான வில்லியம் கோட்டைக்குள் பெண் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் இராணுவத்தின் ‘டி’ குழு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட பெண் குழந்தை மற்றொரு ராணுவ ஊழியரின் மகள். கடந்த சனிக்கிழமை வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் தப்பியோடிய நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு போலீசார் அவரை கைது செய்துள்னர்.