லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் வீர மரணமடைந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் புதனன்று இரவு 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வீரவணக்கம் செலுத்தினார். (செய்தி : 3)