தமிழகத்தில் வரும் மே 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் கட்டாயம் விற்பனை செய்யும்படி தமிழக போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் இந்த சட்டம் சரிப்பட அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழக போக்குவரத்து ஆணையர் திரு.சி.சமயமூர்த்தி, கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அனைத்து இருசக்கர வாகன விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இதில், வரும் மே 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு கட்டாயம் ஹெல்மெட் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.