ஐசிஐசிஐ வங்கி, தனது பங்குகளை விற்று ரூ. 15 ஆயிரம் கோடி திரட்டியுள்ளது. ஐசிஐசிஐ விற்பனை செய்த ஒட்டுமொத்த பங்குகளில் 11 சதவிகிதத்தை சிங்கப்பூரின் மத்திய வங்கியான மானிட்டர் அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் ரூ. 1,662 கோடிக்கு வாங்கியுள்ளது. இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ரூ. 1,086 கோடிக்கும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சொசீட் ஜெனரல் நிறுவனம் ரூ. 832 கோடிக்கும் ஐசிஐசிஐ பங்குகளை வாங்கியுள்ளன.