tamilnadu

img

சீன ஓபன் பேட்மிண்டன் சாய் பிரணீத் அவுட்

சீனாவின் முக்கிய நகரான சாங்ஜோ நகரில் விக்டர் ஓபன் என்ற பெயரில்  சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது.  இந்த தொடரில் பங்கேற்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் அனைவரும் வெளியேறி விட்ட நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில்  சாய் பிரணீத் மட்டும் காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.  எப்படியும் பதக்கத்தோடு சாய் பிரணீத் தாய்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், தனது காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் அந்தோணியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஷாட்கள் மூலம் புள்ளியைக் குவிக்க ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. முதல் செட்டை 19-21 என்ற போராடி இழந்த சாய் 2-வது செட்டிலும் சொதப்பலுடன் போராடினார். இறுதியில் அந்தோணி 21-19 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றி, 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவிற்காகத் தனி ஒருவராகப் போரா டிய சாய் பிரணீத்தும் வெளியேறியதால் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.