விருதுநகர், ஆக.2- விருதுநகர் மார்க்கெட்டிற்கு உளுந்தம் பருப்பு வரத்து அதிகமாக உள்ளது. இத னால் மூட்டைக்கு ரூ.1,500 சரிவு ஏற்பட் டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால், மக்கள் வேலையில்லாமல் வரு மானம் இன்றி தவித்து வருகின்றன. இத னால் வாங்கும் சக்தி கணிசமாக குறைந் துள்ளது. பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. விருதுநகர் மார்க்கெட்டில் மந்த கதியில் வியாபாரம் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள் ளிட்ட பல மாநிலங்களிலிருநது பாசிப்பயறு, உளுந்தம் பருப்பு ஆகிய உணவுப் பொருட்கள் அதிகளளவில் வருகின்றன. இதனால் உளுந்தம் பருப்பின் விலை மூடைக்கு ரூ.1,500 வரை குறைந்துள்ளது. ஆந்திரா உளுந்து கடந்த வாரம் ரூ.8,300 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7500 ஆக குறைந்துள்ளது. உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் ரூ.11 ஆயிரமாக இருந்தது. இந்த வாரம் ரூ.9,500 ஆக குறைந்துள்ளது. பாமாயில் விலை டின் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்துள் ளது. கடந்த வாரம் ரூ.1,350 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1370 ஆக உயர்ந்தது.