tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச் 3- பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் மய மாவதை தடுத்து பாதுகாக்க வேண்டும், ரயில்வேயில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், எல்ஐசி பங்கு களை விற்கக்கூடாது என வலி யுறுத்தியும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதிஒதுக்கியதை கண்டித் தும் ரயில்வே டிஆர்இயூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி கோட்டத்  தலைவர் எம்.எஸ்.மொய்தீன்  தலைமை தாங்கினார். ஜி. கண்ணன் முன்னிலை வகித்தார். மண்டல துணைத்  தலைவர் ஆர்.இளங்கோ வன், எல்ஐசி வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ராமன், சிஐடியு மாவட்டத்  தலைவர் எஸ்.முத்துக்கும ரன், செயலாளர் ஆர்.மூர்த்தி,  கள்ளக்குறிச்சி மாவட்ட சிஐடியு பொருளாளர் வீ.ராசா, திருச்சி கோட்ட துணைத் தலைவர் கே.பல ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசினர். கிளைச் செயலாளர் ஈஸ்வரதாஸ், சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.