திருவில்லிபுத்தூர், மே 22-சதுரகிரி மலையில் சதுரகிரி வட்டாரசுமைப் பணிதூக்கும் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் ஆா்ப்பாட்டம்நடைபெற்றது. வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி ஆகிய விசேஷங்களுக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டும் சாமி தரிசனம்செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புகோவில் பகுதியில் குடிநீா் பற்றாக்குறையை காரணம் காட்டி தனியார் அன்னதான கூடங்களை அறநிலையத்துறை மூட உத்தரவிட்டது. இதனால் மலைக்குபொருட்களை கொண்டு செல்லும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும்மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அனுமதி வழங்கிட வேண்டும்.பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கும் வகையில் உணவு கூடங் களை திறந்து தொடா்ந்து நடத்த வேண்டும். தாகம் தீா்க்க இலவசமாக குடிநீா் வழங்க வேண்டும். சதுரகிரி மலையை நம்பி வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை பணி தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி சி.ஐ.டி.யு சதுரகிரி மலை வட்டார சுமைப்பணி தலைச்சுமைதொழிலாளர் சங்கம் சார்பில் வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு சங்க தலைவா் கோட்டமலை தலைமை வகித்தார். சிஐடியுமாவட்ட செயலாளா் பி.என்.தேவா,சிபிஎம் ஒன்றிய செயலாளா் ஜெயகுமார் ,ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் மணிகுமார், கனகராஜ் மாரி முத்து ஆகியோர் பேசினர்.