உளுந்தூர்பேட்டை மே 22-விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உளுந்தூர்பேட்டை நகரக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த ரத்ததான முகாமிற்கு வாலிபர் சங்கத் தின் நகரத் தலைவர் எம்.சிவகிருஷ்ணன் தலைமை ஏற்றார். நகரச் செயலாளர் இ.சதீஷ் குமார் வரவேற்றார். உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கே.பாலச்சந்தர் மற்றும் வட்டாட்சியர் நா.வேல்முருகன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து உரையாற்றினர்.அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் நளினிபோஸ், காவல் ஆய்வாளர் கே.உதயகுமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் முகம்மது கனி,வழக்கறிஞர் எம்.கிருபாபுரி, எம்.அன்பழகன், அன்பு கேண்டீன் உரிமையாளர் பி.சக்திவேல், ரத்தவங்கி மருத்துவர் பாலமுருகன், நகர் முக்கிய பிரமுகர்கள் சேனக்ராஜ் சோரடியா, ஏ.பர்சன்சந்த் மற்றும் பல்வேறு ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷினி, ரத்ததான கழக மாவட்ட அமைப் பாளர் வி.மார்த்தாண்டன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ரிச்சர்ட், மாவட்டச் செயலாளர் கே.வி. ஸ்ரீபத் உள் ளிட்டோர் முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்து வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் நகரக்குழு தோழர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். நகர பொருளாளர் ஆர்.ஐயப்பன் நன்றி கூறினார்.