திருவில்லிபுத்தூர், மே13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் புயல் கலைக்குழுவினர் 18 பேர், பாடகர்கள் 3 பேர் மொத்தம் 18 பேருக்கு அரிசி, பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் வழங்கினார். நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் சண்முகம், இராஜபாளையம் கிளைச் செய லாளர் நந்தன் கனகராஜ், மருத்துவர் மந்திரி குமார், சுந்தரமூர்த்தி, நித்தியானந்தம், ராஜா என்ற ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.வத்திராயிருப்பில் மக்கள் மருத்துவர் பால்சாமி தலைமையில் துக்கை யாண்டி உள்ளிட்ட நலிந்த நிலையில் உள்ள எட்டு கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.