இராஜபாளையம், ஜூன் 25- இராஜபாளையம் ஒன்றியம் சத்தி ரப்பட்டியில் உதவி மின் பொறியாளர் அலு வலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்க ளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக சத்திரப்பட்டி பகுதி தொழிற் சாலைகள் மிகுந்த பகுதி. சிறு விசைத் தறி கூடங்கள் இரண்டாயிரத்துக்கும் மேல் உள்ளது. இந்தநிலையில் சத்திரப்பட்டி உதவி மின் பொறியாளர் பணியிடம் காலி யாக உள்ளது. ஆசிலாபுரம் உதவி மின் பொறியாளர் கணபதி பொறுப்பு அலுவல ராக செயல்பட்டு வருகிறார். ஏழு மின் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் ஆனால் ஒருவர் தான் உள் ளார். ஏழு மின் உதவியாளர்கள் பணி யிலிருக்க வேண்டும். ஒருவர தான் உள்ளார். எங்காவது ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கு காலதாமத மாகிறது. மின்சாரம் தடைபட்டால் உட னடியாக சரி செய்யவதற்கு பணியாளர் கள் இல்லை. அலுவலகத்தில் மனுக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்ப தில்லை. சமயத்தில் பணம் கொடுத்தால் வேலை நடக்கிறது. இந்தநிலையில் கூடு தல் மின்பணியாளர்களை நியமிக்க வேண்டும். பணம் கேட்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முரு கேசன், சோமசுந்தரம் ,ஜீவானந்தம் உட் பட பலர் கலந்துகொண்டனர்.