tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல், ஜூன் 3-நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், விட்டமநாயக்கன்பட்டி 2 வார்டுகளில் 60க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இதில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயம், லாரி பட்டறை உள்ளிட்ட தொழிலுக்கு செல்லக்கூடிய இப்பகுதியில் காவிரி குடிநீர் மற்றும் உப்பு நீர் ஆகியவை கடந்த சில மாதங்களாக முறையான  விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், உப்பு நீருக்கான மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்ட போது நீங்களே வசூல் செய்து சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.எனவே, குடிநீர் பிரச்சனையை தீர்வு காண வேண்டும் என வலிறுத்தி அப்பகுதி மக்கள் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.