தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மணக் கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டி யூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர் கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வரு கிறது. இந்நிலையில், அரசூர், காட்டுக் கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர் மீது செம்மண், கிராவல்கள் பரப்பியுள்ள நிலையில், அதற்கு விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் எங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீசும் வழங்கவில்லை. அதற்கான இழப்பீடு தொகையையும் கொடுக்கவில்லை என முழக்கமிட்டனர். மேலும், டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் விவசாயிகளை அழைத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக உறுதியளித் தார். தற்போது பணிகள் நிறுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில், திருவையாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், பொது மக்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து உடனடியாக புறவழிச்சாலையை அமைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத் தனர். மேலும் மனுவில், ‘‘திருவையாறில், தஞ்சாவூர் முதல் அரியலூர் தேசிய நெடுஞ் சாலையில் அதிக அளவு வாகன போக்கு வரத்து உள்ளது. இதனால் திருவையாறு பேருந்து நிலையம் முதல் தேரடி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கஸ்தூரிபாய் நகர் மற்றும் சோப்பு கம்பெனி முதல் புனல்வாசல் ஆகிய இடங்களில் விபத்துகள் ஏற்பட்டால், ஆம்பு லன்ஸ் வருவதாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இயலவில்லை. எனவே, திருவையாறு புதிய புறவழிச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தனர்.