districts

img

அணைப்பாளையம் டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 16- திருப்பூர் மாநகராட்சி  அணைப்பாளையம் பகுதி யில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடி யாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட  ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினர். அணைப்பாளையம் நொய்யல் பாலம் செல்லும் பாதையில் டாஸ்மாக்  கடை (எண்:1965) கடந்த சில தினங்க ளுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறக்க ஏற்பாடு நடைபெறு வதை அறிந்து அப்பகுதி மக்கள் ஆரம் பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்துக் கட்சியினர் பங்கேற்புடன் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப் போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இங்கு கடை திறக்கப்ப டாது என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதிமொழிக்கு மாறாக அதே இடத்தில் மாவட்ட  டாஸ்மாக் நிர்வாகம் புதிய கடையைத் திறந்துள்ளது இப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இத னால் அந்த கடை திறக்கப்பட்ட நிலை யில் அனைத்துக் கட்சியினர் மீண்டும்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 14ஆம்  தேதி மார்க்சிஸ்ட் கட்சியின் அணைப் பாளையம் கிளை அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட் டது. இதில் டாஸ்மாக் கடையை அகற்ற  மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து  வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படி வியாழனன்று அதிமுக கவுன்சிலர் தங்கராஜ், சிபிஎம் நகரச்  செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜ், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் செல்வ ராஜ், காங்கிரஸ் நிர்வாகி வி.ஆர்.ஈஸ் வரன், கொமதேக நிர்வாகி தம்பி வெங் கடாசலம், த.பெ.தி.க. மாவட்டத் தலை வர் சண்.முத்துக்குமார், மதிமுக நிர் வாகி கௌரிசங்கர், ரங்கநாதபுரம்  சிபிஎம் கிளைச் செயலாளர் செல்வ குமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தினர். இது தொடர் பாக டாஸ்மாக் மேலாளரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வினீத் கூறியதாக அனைத்து  கட்சியினர் தெரிவித்தனர்.