districts

img

காளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் மனு கொடுக்கும் இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜன.9- தமிழகமே போராடி மீட்டுக் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திட அனுமதிக்கக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்க ளன்று ஜல்லிக்கட்டு மாடுகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இயக்கத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் வெற்றிசெல்வன், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓராண்டு காலமாய் காளைகளை தயார் செய்து பல ஆயிரம் ரூபாய் பொருட்செலவு செய்து காளைகளை வளர்த்து வரும் எங்க ளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண் டும். ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணி  முதல் மாலை 4 மணி வரை  நடத்திட அனு மதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளை  மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான டோக்கனுக்கு எந்த விதமான பணமும் பெறாமல் இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டன.