அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே ராயன் கோயில் பகுதியில் நடைபெற்ற வேலாயுதம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அடிப்படை பிரச்சனை களை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், வேலாயு தம்பாளையம் ஊராட்சியில் மக் கள் தொகைக்கேற்ப குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும். நீர் வழித் தடங்கள் மற்றும் குளங் களைத் தூர்வார வேண்டும். தாமரைக்குளம் ஏரிகளை பலப் படுத்த வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும். ரிசர்வ் சைட்டுகளை பாது காக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி அங்கீகாரம் வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற அலு வலகத்தை விரிவுபடுத்தி புதிய கட்டி டம் அமைக்க வேண்டும். வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதேபோல், பாரதி நகர், விஐபி கார்டன், லட்சுமி கார்டன், சக்தி நகர், தாமரை கார்டன், ருமா கார் டன், மகா நகர், கொடிகாத்த கும ரன் நகர், ஐஸ்வர்யா கார்டன், ராயர் நகர், அவிநாசி லிங்கேஸ் வரர் நகர், அன்னபூரணி நகர், காசிகவுண்டன்புதூர், கருணாம் பிகை நகர், ராயன்கோயில் மயா னத்திற்கு பின்புறமாக ஆகிய பகுதிகளில் தார் சாலை, சாக்கடை வசதி, தண்ணீர் வசதி மற்றும் மேல்நிலை தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும். போர்வெல் அமைக்கப்பட்ட இடங்களுக்கு மின்மோட்டார் பொருத்த வேண் டும். மங்கலம் சாலை பேருந்து நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். கணினி மையத்தை மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள் ளிக்கு மதில் சுவர் அமைத்து 1500 லிட்டர் கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் தொட்டி மற்றும் கலை அரங்கம் அமைத்து தர வேண்டும். கருணைபாளையம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு பேருந்து வசதி ஏற் படுத்தித்தர வேண்டும். துணை சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர்கள் நியமித்து, 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும், பூங்காவை புதுப்பிக்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்குச் சுற் றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் சின்ன கருணைபாளை யம், காடேஸ்வரா நகர் ஏடி காலனி, பாலாஜி நகர், குடிநீர் இணைப்பு, ஸ்ரீ கருணாம்பிகை நகர், உமை யஞ்செட்டிபாளையம், ஏஎஸ் கணபதி நகர், பூளக்காட்டுபாளை யம், திருவள்ளுவர் நகர், சக்தி நகர், ஆதிதிராவிடர் காலனியில் ஆட்டையாம்பாளையம், கேவிஆர் கார்டன், செட்டிகாடு, அரவங்காடு, புளியங்காடு, வேலாயுதம்பாளை யம் ஏ.டி.காலனி ஆகிய பகுதி களில் கழிவுநீர் கால்வாய், குடி தண்ணீர், தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஞாயி றன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மனு அளித் தனர்.