அவிநாசி, ஜூன் 29 - அவிநாசி ஒன்றியங்களில் வெள்ளியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பெரும் பாலான ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒத்திவைக் கப்பட்டது. இதையடுத்து அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட 31 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முறி யாண்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜ்நகரில் 700 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு துவக்கப் பள்ளி, குடி நீர் மேல்நிலைத் தொட்டி, தரை மட்டத் தொட்டி, அங்கன்வாடி மையம், சாக்கடை வசதி ஆகியவை செய்து தருமாறு பொதுமக்கள் மனு அளித்தனர். இதேபோல் பொங்கலூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் பிரச் சனைத் தீர்க்க வேண்டும். ஆதி திராவிடர் காலனி அருகே தனியார் ஆக்கிரமித்துள்ள உள்ள குளத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்திருந்தனர். சேவூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை மையத்திற்கு அருகிலேயே வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் அங்கன்வாடி குழந்தைகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தி ருந்தனர். உப்பிலிபாளையம் ஊராட் சியில் குடிநீர் பிரச்சனை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்ச னைகளை தீர்க்கக்கோரி பொது மக்கள் முறையிட்டனர். வடுகபாளையம் ஊராட்சியில், பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகத்தைத் தூய்மைப்படுத்தி முறையாக பரா மரிக்க வேண்டும். மேலும் சீராக ஆற்றுக் குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கருமாபாளையம் ஊராட்சியில், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத் தனர். புதுப்பாளையம் ஊராட்சி யிலுள்ள வஞ்சிபாளையத்தில் தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் 4 வது குடிநீர் திட்ட குழாய் வஞ்சிபாளையம் வழியாக தான் செல்கிறது. எனவே 4வது குடிநீர் திட்ட குழாயிலிருந்து பொதுக் குழாய் அமைத்துத் குடிநீர் வழங்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பெருமாநல்லூர் ஊராட்சி யிலுள்ள கொண்டத்துக் காளியம்மன் கோயில் பாதையை கதவு அமைத்து மூடக்கூடாது. மேலும் கோயில் சாலையை சீர மைக்க வேண்டும். பெருமாநல்லூர் -பனங்காடு பகுதி வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைப் பிரிவில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். கருவலூர் ஊராட்சி இந்திரா நகர் 2வது வீதியில் சாக்கடை வசதி கேட்டும், நியாய விலைக் கடை களில் பாமாயிலுக்கு மாற்றாக நல்லெண்ணெய், கடலெண் ணெயும், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக கருப்பட்டி, பனை வெள்ளம், நாட்டு சர்க்கரை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் களுக்கு பசும்பாலுக்கு ரூ.40, எருமைப் பாலுக்கு ரூ.50 விலை உயர்வு செய்ய வேண்டும் என களஞ்சியம் விவசாயச் சங்கத்தினர், ஊராட்சி ஒன்றிய அதிகாரி அருணா சலம், செயலாளர் பரமனுல்லா ஆகியோரிடம் மனு அளித்தனர்.