விருதுநகர், மே 12- விருதுநகர் மற்றும் சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் முழு ஊரடங்கால் சிரமப்பட்டு வரும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விருதுநகர் அருகே உள்ள கணபதி நகர் பகுதியில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு தலைமை யேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியன், எல்கை முருகன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பி.ராஜா, க.பாண்டியராஜன், ஜெ.ஜே.சீனிவாசன் உட்பட பலர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
மேலும் இதில், கற்பூரம், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். விருதுநகரில் சந்துரு நினைவகத்தில் 45 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர்குழு உறுப்பினர் பி.ராஜா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், வழக்கறி ஞர் சத்தியராஜ், மாரிக்கனி, டேனியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் முருகன் காலனி, சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த 500 ஏழைக் குடும்பத்தினருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகர் செய லாளர் கே.முருகன் தலைமையேற்றார். மாவட்டச் செயலா ளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா ஆகி யோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.