tamilnadu

img

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, நவ. 12- அவிநாசி அருகே ராமியபாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவிநாசி ஒன்றியம், தண்டுகார பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமிய பாளையம் ஏடி காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆழ் துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தண் ணீர் வரவில்லை. இதேபோல் கூட் டுக் குடிநீர் திட்டம் மூலம் விநியோ கிக்கப்பட்டு வந்த குடிநீரும் கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அக் கிராம மக்கள் செவ்வாயன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து வட்டார வளர்ச்சி துணைஅலுவலர் பணி மலர்,  உடன டியாக ஊராட்சி பகுதியில் ஆய்வு மேற் கொண்டு முறையான குடிநீர் விநியோ கிக்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.