tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்:விதொச வலியுறுத்தல்

திருப்பூர், செப். 8 - வட்டாலபதி ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீரக்க வேண் டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. ஊத்துக்குளி தாலுகா வட்டாலபதி கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டு கொடியேற்று விழா  நடைபெற்றது. ஞாயிறன்று நடை பெற்ற கொடியேற்று விழாவுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத் தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை ஏற்றார். புதிய கிளைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் குமார சாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் கே.ஏ.சிவ சாமி, சிஐடியு நிர்வாகி ச.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில் வட்டாலபதி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் மாணிக்கம், தங்கவேல், குப்புசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஒத்த பனைமேடு கிளை நிர்வாகிகள் விஜயன், செல்வ ராஜ், மூர்த்தி, வட்டாலபதி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.   வட்டாலபதி ஊராட்சியில் நில வும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க  வேண்டும், திருப்பூர் -கோபி பேருந்து பெருமாநல்லூர், சமத்துவபுரம், கரு ணாம்பதி, வட்டாலபதி, குன்னத்தூர் வழியாக செல்ல புதிய பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.