tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் குவிந்த மனுக்கள்

அவிநாசி, ஜூலை 6- திருப்பூர் அடுத்த காளி பாளையம் ஊராட்சியில் குடிநீர், கழிப்பிட வசதி, மின் சாரம் மற்றும் மயானத் துக்கு செல்லும் பாதை அமைத்துக் கொடுக்குமாறு சனியன்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆய்வு மேற் கொண்டபோது பொது மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் ஒன்றியத்திற் குட்பட்ட காளிபாளையம் ஊராட்சி ஏடி காலனி குடி யிருப்பில் 600க்கும் மேற் பட்டோர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் குடிநீர் வாரம்  ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படு கின்றது. அதுவும் குறைந்தளவு குடிநீர் மட்டுமே வருகிறது.  இதனால் குடிநீர் தனி யாரிடம் விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிப்பிட  வசதியின்றி பெண்கள் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதேபோல் படையப்பா நகர் பகுதியில் மின்சார விநியோகம்  முறையாக கிடைப்பதில்லை. இதனால் மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். முறையாக குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  மயானத்திற்கு செல்ல வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டு மென  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். 

வள்ளிபுரம் ஊராட்சி

திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளி புரம் ஊராட்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார் ஊராட்சி யில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முத்து நகர் பகுதி மற்றும் பல்வேறு பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு சட்டமன்ற உறுப்பினர் விஜய குமாரை  முற்றுகையிட்டனர். மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வேலை செய்யும் தொழிலாளிக்கு 50 நாட்கள் மட்டுமே வேலை தரப்படுவ தாகவும், குடிநீர் குழாயை அடைக்கப் பட்டுள்ளதால் அவதிக்குள்ளாகி வருவ தாகவும் இப்பகுதி பொதுமக்கள் மனு  அளித்தனர். இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  இதுகுறித்து  கிராமப்பகுதி மக்கள் கூறு கையில்,  சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் முறையான அறிவிப்பு பொதுமக்களுக்கு தெரிவிப்பது இல்லை. சட்டமன்ற உறுப்பினர்  திடீரென  ஆய்வு மேற்கொள்ளும் நாளில் மனுக்கள் பெறுவ தாக தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் சரியாக தகவல் தெரிவிக்காமல் கண்துடைப்புக்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக தெரிவித்தனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களாக ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மனுக்களை பெறுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார். அடிக்கல் நாட்டப்பட்டதை மட்டும் பார்வையிடுகிறார். ஆனால் குடிநீர் பிரச்சனை பெருமளவு பேசப்பட்டு வரு கிறது. இந்நிலையில் சில இடங்களில் மட்டும் ஆழ்துளை கிணறு அமைப்பதாக வாக்குறுதி மட்டும் அளித்துவிட்டு செல்வ தாக ஆவேசமாக தெரிவித்தனர்.