tamilnadu

நிவாரண உதவிகள் வழங்கல்

திருவில்லிபுத்தூர், மே 16- திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற் கான அறக்கட்டளை (டெஸ்ட்) சார்பில் இராஜபாளையம் வட்டத்தில் பஞ்சாலை யில் பணிபுரியும் 200 புலம்பெயர் வட மாநிலத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், சோப்பு , சேனிடைசர் அடங் கிய சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கபட்டன. டெஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் வேல்மயில்,  கள ஒருங்கிணைப்பாளர் சத்யா, களப்பணியாளர்கள் ரேவதி, சக் தீஸ்வரி, ஆகியோர் வழங்கினர்.