tamilnadu

img

மாரமங்கலத்துப்பட்டியில் நிவாரண உதவிகள் வழங்கல்

சேலம், மே19- சேலம் மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சியில் பொதுமக்க ளுக்கு  நிவாரண பொருட்களை  சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி வழங்கினார். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரமங்கலத்துப்பட்டியில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்க ளுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன் மணி வழங்கினார். இதில் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர் கவியரசி ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் கண்னன், மாவட்ட எம்.ஜீஆர்.மன்ற துணை செயலாளர் சேதுபதி, ஊராட்சி செயலாளர் முரு கேசன், ஒன்றிய பொருளாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.