tamilnadu

தடை செய்யப்பட்ட  லாட்டரி விற்பனை

இராஜபாளையம், மார்ச் 21- இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மூவேந்தன், கௌதம் விஜய் தலைமையில் காவலர்கள் ஜவஹர் மைதானம் மற்றும் அம்பலப்புளி பஜார், நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நான்கு பேரைப் பிடித்து சோதனையிட்டனர். அதில் கேரளலாட்டரி விற்பனைக்காக மூன்று நம்பர் எழுதப்பட்ட துண்டுச் சீட்டு மற்றும் விற்பனை செய்த பணம் ஆயிரத்து 60 ரூபாயைவைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இராஜபாளையத்தை சேர்ந்த செல்வம் (40), மணிகண்டன் (28), மாரியப்பன் (51), சுரேஷ் குமார் (48) என்பது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்த னர்