கண்டுகொள்ளாத காவல்துறை
சேலம், டிச.4- சேலத்தின் புறநகர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபான விற் பனை மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக எவ்வித அக்கறையும் காட்டாமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்து வருவதாக என குற்றச்சாட்டு எழுந் துள்ளது. சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஏற் காடு, அயோத்தியாபட்டினம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதி களில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அதி கரித்து வருகிறது. இதனால் புற நகர் பகுதிகளில் எண்ணற்ற பிரச்ச னைகள் பொது இடங்களில் அரங்கேறி வருகிறது. இதில் சில பகுதிகளில் வெளிப்படையாக காவல்துறை துணையுடன் சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின் றனர்.
குறிப்பாக சங்ககிரி சப்-டிவிஷ னுக்குட்பட்ட மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பெருமளவில் மது விற்பனை, லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதில் இளம்பிள்ளை, இடங்கண சாலை பெருமாகவுண்டம்பட்டி, ராமாபுரம், கூடலூர், மகுடஞ் சாவடி, ஏகாபுரம், தப்பகுட்டை, கேகே நகர், பாப்பாபட்டி, மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மது பான கடைகள் 6 உள்ளது. அதே நேரம், இப்பகுதியைச் சுற்றி அனுமதி பெறாமல் கள்ளச்சந்தை யில் 60க்கும் மேற்பட்ட சட்ட விரோக கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி தகராறுகள் அரங்கேறி வருகின்றன.
மேலும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் இப்பகுதியில் ஒரு நாளைக்கு பல லட்சத்திற்கு மேல் விற்பனையாகின்றன. இந்த இரண்டு தொழில்களும் காவல் துறையினரின் துணையோடு நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுப்பப் படுகிறது. குறிப்பாக, காவல் நிலை யத்திற்கு வரும் புகார்கள் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்கும் தனிப்பிரிவு போலீசாருக்கு அனுப் பப்படும். இந்த புகாரின் பேரில் தனிப்பட்ட முறையில் விசாரணை என சம்பந்தப்பட்டவர்களிடம் காவல்துறையினர் வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வசூலிக்கப் படும் தொகை காவலர்களின் பணி தன்மைக்கு ஏற்றவகையில் பிரித்துக் கொள்வதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக, இப்பகுதியில் அதிக ளவில் குற்றச் சம்பவங்கள் நடை பெற்று வருவதை குறைக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இளம்பிள்ளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளிடம் சுமார் ரூ.20 லட்சம் நிதி உதவி பெற்று 14 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு உள்ளது. ஆனால் இன்று வரை அவை அனைத்தும் செயல் பாடு இன்றி முடங்கி கிடக்கிறது. இவ்வாறு தொடர்ந்து குற்ற சம்ப வங்கள் நடக்க காவல்துறையி னரின் இந்தத் தவறான அணுகு முறை உள்ளது எனவும், இதனை தடுக்க மாவட்ட கண்காணிப் பாளர் தீபாகனிக்கர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)