மது பாட்டில்களை சாலையில் எறிந்து இளைஞர்கள் ஆவேசம்
கோவை, அக்.15- கோவை சூலூர் செங்கத்துத் துறை கிராமத்தில் சவுக்குத்தோப்பு என்ற இடத்தில் கள்ளச்சந்தையில் நடைபெற்ற மது விற்பனையை தடுத்து நிறுத்திய இளைஞர்கள், மது பாட்டில்கள் சாலையில் போட்டு உடைத்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், சூலூரை அடுத்த செங்கத்துறையில் கள்ளச் சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் அப்பகு தியை சேர்ந்த இளைஞர்கள் இது குறித்து சூலூர் காவல் துறைக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து மது பாட்டில்களை சூலூர் காவல் துறையினர் பறிமுதல் செய்து சென்றனர். இந்நிலையில் செங்கத் துறை சவுக்குத்தோப்பு என்ற இடத் தில், மீண்டும் கள்ளச்சந்தையில் மது விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைய டுத்து அப்பகுதியைச் இளைஞர்கள் சிலர், குடிசையில் பதுக்கி வைத்தி ருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவற்றை தரையில் வீசி உடைத்தனர். இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், இந்த சட்டவிரோத மதுபான கடையால் ஊருக்குள் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், இங்கு மதுகுடித்து விட்டு சாலையில் சண்டை போடுகின்றனர். இந்த சட்ட விரோத மது விற்பனை குறித்து புகாரளித்தும், விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவ தால் மதுபாட்டில்களை உடைத்து எறிந்ததாக ஆவேசமாகத் தெரி வித்தனர்.