tamilnadu

img

சங்கராபுரத்தில் ரயில் பாதை அமைத்திடுக சிபிஎம் கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்

சங்கராபுரம். அக். 5- சின்னசேலத்தில் இருந்து கள்ளகுறிச்சி, சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறை வேற்றி போக்குவரத்தை துவங்கிட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்க ராபுரம் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யுள்ளது. குடிநீர் பிரச்சினையை போக்க வேண்டும், துணை சுகாதார நிலையங்களை அனைத்து வகையிலும் மேம்படுத்த வேண்டும், அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மலையடி வாரத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும், இலவச மனைப் பட்டா  மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு பட்டா வழங்க  வேண்டும், சங்கராபுரம் பேருந்து நிலை யத்தை விரிவுபடுத்தி அனைத்து ஊர்க ளுக்கும் போதுமான அரசு பேருந்துகளை இயக்க வேண்டும், அரசு கலை, அறிவியல், பொறியியல், வேளாண் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மக்க ளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு வகையிலான கோரிக்கைகளை முன்வைத்து சங்கராபுரம் பேருந்து நிலைய  பொதுமேடையில் இம்மநாடு  நடைபெற்றது. கட்சியின் வட்டச் செயலாளர் வை.பழனி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பி னர் கோ.மணிமாறன் வரவேற்றுப் பேசி னார். மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் சிறப்புரையாற்றினார். விழுப்புரம்  தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை,  மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணி யன், எம்.கே.பூவராகன் மற்றும் மூத்த தலை வர் எம்.சின்னப்பா ஆகியோர் உரையாற்றி னர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ச.சசி குமார், வி.ஏழுமலை, மு.சிவகுமார், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவாஜி, எம்.ஆறுமுகம், ஆர்.பூமாலை, இ.மீனா, கே. பாஸ்கர், எம்.உத்திரகோட்டி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.