விழுப்புரம்.பிப்.24- விழுப்புரம் மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் துரை. ரவிக்குமார் தத்தெடுத்துள்ள காந்தலவாடி கிராமத்தில் வரும் பிப்.26 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறு வனங்கள் பங்கேற்று இளைஞர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்புக்கான ஆணைகளை வழங்க இருக்கிறார்கள். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முது நிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வரை எவர் வேண்டு மானாலும் இந்த முகாமில் பங்கேற்கலாம். ஐடிஐ, பொறியி யல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் தமது கல்விச் சான்று கொண்டு வரவேண்டும்.இங்கு சுமார் ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.