tamilnadu

img

ஜூலை 30 அன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்க முடிவு

விழுப்புரம், ஜூலை 21- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு அரியலூர் திருக்கை கிளைத்  தலைவர் ஆர்.சௌந்தர ராஜன் தலைமையில் நடை பெற்றது. மாநிலக் குழு  உறுப்பினர் வி.ராதாகிருஷ் ணன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி சங்கத் தின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து  விளக்கி பேசினார். சிபிஎம்  விழுப்புரம் வட்டச் செயலாளர்  ஆர்.கண்ணப்பன் மாநாட்டை  வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் கலந்து கொண்டு  பேசுகையில், “ சங்கம் சாதி,  மதங்களுக்கு அப்பாற்பட்ட சங்கம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். போராடாமல் எதுவும் கிடைக்காது. உரி மைக்காக போராடினால் வெற்றி பெற முடியும். அத னால் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உரிமைக்காக ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும்” என கேட்டுக்கொண்டார். நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52-ன் படி 4 மணி  நேரம் வேலை, ரூ. 229 முழு  கூலி வழங்க வேண்டும், லஞ்  சம் இல்லாமல் வங்கிக் கடன்,  இலவச வீடு, ஸ்கூட்டி, மூன்று  சக்கர சைக்கிள் சக்கர நாற்  காலி ஆகியவை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், கடனுதவி வழங்காத வங்கி கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். இந்த கோரிக்கை களை வலியுறுத்தி இம் மாதம் 30 ஆம் தேதி காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது  என்று முடிவு செய்யப் பட்டது. மாநாட்டில்   வட்டத் தலை வராக  சௌந்தரராஜன், செய லாளராக  முருகன்,  பொருளா ளராக ஜெயக்குமார் ஆகி யோர்  நிர்வாகிகளாக தேர்வு  செய்யப்பட்டனர்.