tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூலை 5- மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் விழுப்பு ரத்தில் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.சிவசங்கரன் தலை மையில் நடைபெற்றது. மாநில துணைத் தலை வர் கே.அம்பிகாபதி, சிஐடியு  வடக்கு மாவட்டத் தலைவர்  எஸ்.முத்துகுமரன் ஆகி யோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். ஆர்பாட்டத் தில் நிர்வாகிகள் எம்.புரு சோத்மன், ஆர்.சேகர், ஆர். அருள், கே.ஏழுமலை, கே. செல்வம், இ.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.