திருவில்லிபுத்தூர், மே 27- திருவில்லிபுத்தூரில் பல நூறு ஏக்கரில் விவசாயிகள் வாழையைபயிரிட்டு வருகின்ற னர். வாழை இலைகள், வாழைபூ, வாழை காய் போன்றவைகள் கோவிட் 19 பாதிப்பு காரணமாக எதிர்பார்த்த விலை கிடைக் காததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஹோட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. திரு வில்லிபுத்தூரில் பெரும்பான்மையான உண வகங்களில் பார்சலுக்கு வாழை இலைக்கு பதி லாக சில்வர் நிறத்தில் உள்ள பேப்பரை பயன்படுத்துவதால் வாழை இலை பயன்பாடு குறைந் துள்ளது. வாழை விவசாயி சுப்பிரமணியன் கூறும்போது, ஏற்கனவே திருவில்லிபுத்தூர் பகுதியில் திடீர் சூறைக்காற்று மற்றும் மழை யின் காரணமாக வாழைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
அதனால் எங்களுக்கு நஷ் டம் ஏற்பட்டது மேலும் வாகன போக்குவரத்து இல்லாததால் வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தோம். தற்போது ஓட்டல்களில் பார்சலுக்கு வாழை இலையை பயன்படுத்துவது குறைந்துள்ளதால் வாழைஇலை விற்பனை மேலும்குறைந்து உள்ளது. இதனால் அறுக்காமல் வாழை மரத்தில் விட்டுள்ளோம். மேலும் ஓட்டல் களில் பார்சலுக்கு வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.