tamilnadu

அரூரில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தருமபுரி, அக்.22- அரூரில் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், அரூரில் மாநில வரி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் மாநில வரி உதவி ஆணையர் (ஒசூர்) என்.மூர்த்தி  தலைமை வகித்தார். வணிகர்கள் மாதம் ஒருமுறை மற்றும் மூன்று மாதங் களுக்கு ஒருமுறை ஜி.எஸ்.டி வரி செலுத்தியதற்கான கணக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜி.எஸ்.டி-யின் ஓராண்டுக்கான கணக்கு தாக்கல் செய்தல் அவசியமாகும். எனவே, 2019 நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி ஓராண்டுக்கான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து வணிகர்களும் ஆண்டு கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என உதவி ஆணையர் என்.மூர்த்தி, மாநில வரி  அலுவலர் (அரூர்) ஏ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரி வித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் மாநில துணை வரி  அலுவலர்கள் சி.முத்துகுமார், பி.வேலு மற்றும் அரூர் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.