விழுப்புரம்:
பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. திங்களன்று (ஆக.9) விழுப்புரம் நீதிமன்றத் தில் ஆஜரானார்.
கடந்த ஆட்சியின் போது முதல் வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் செய்துவந்தார். அப்போது இளம் பெண் எஸ்பி ஒருவருக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொந்த ரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகார் அளிக்க சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த பாதிக்கப் பட்ட பெண் எஸ்பிஐயை அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி தடுத்து நிறுத்தினார் இதனை தொடர்ந்து அப்போதைய டிஜிபி மற்றும் உள்துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இது குறித்து சிறப்பு டிஜிபி, எஸ்பி மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.
சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கில் 400 பக் கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தாக்கல் செய்தனர். தொடர்ந்து திங்கட்கிழமை நீதிபதி கோபிநாதன் முன்னி லையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் தனித் தனியே வழங்கப்பட்டது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. சார்பில் தனித்தனியே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கோபிநாதன் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்தவழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வைத்திய நாதன், கலா ஆகியோர் ஆஜரா கினர். வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.முன்னாள் டிஜிபி நீதிமன்றத் தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.