tamilnadu

img

மதஒற்றுமைக்காக ஆட்சியையும் இழக்க தயார்: வே.நாராயணசாமி

புதுவை முதலமைச்சர் வே.நாராயணசாமி பேசுகையில், இந்தியாவின் 70 விழுக்காடு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங் கள் சிஏஏ-வை எதிர்க்கின்றன. உ.பி.-யில்  சிஏஏ எதிர்ப்பவர்கள் மீது அம்மாநில முதல மைச்சர் பொய் வழக்குகளில் கைது செய்து சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருகிறார் என்றார்.

சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என எதுவாக  இருந்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு சம அதிகாரம், உரிமை உள்ளது. மதத்தைபற்றி யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. குடியுரிமையை பறிப்பதற்கு மோடி, அமித்ஷா யாருக்கும் உரிமை கிடையாது. சிஏஏ உள்ளிட்டவைகளை ஆதரித்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்,  தற்போது அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்த கூட்டணியில் உள்ள பாஜக ஆத ரித்துள்ளது. பாஜக கூட்டணியிலேயே ஓட்டை விழுந்துள்ளது. பீகாரில் கூட்டணியை விட்டு பாஜக வெளியேறுமா? என்று கேள்வி எழுப்பினார். தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர்.  மதத்தால் மக்கள் பிரிய மாட்டார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிரிப்ப தற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், ரத்தம் சிந்தினாலும் மத ஒற்று மைக்காக சிந்துவோம். எங்கள் ஆட்சியை கலைத்தாலும் கவலைப்பட மாட்டோம் என்றும் நாராயணசாமி கூறினார்.