tamilnadu

img

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது!

விழுப்புரம்,ஜனவரி.04- கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த நிலையில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்கு பிறகு சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஏஞ்சல்ஸ், எமில்டா, டோமினிக் மேரி ஆகிய 3 பேரை ஜனவரி 10ஆம் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.