ஐக்கிய நாட்டு சபையில் பருவநிலை குறித்தான மாநாட்டில் பேசிய கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமிக்கு ”வாழ்வாதார உரிமை விருது” வழங்கப்படவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை செப் 23 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்தான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பருவநிலை மாற்றம் குறித்து ஆக்ரோஷமாக அவர் பேசிய வார்த்தைகள் உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பருவநிலையில் மாற்றத்திற்கான போராட்டத்தை உலக முழுவதும் கொண்டு சென்றதற்காகவும், இதற்கான விழிப்புணர்வை உலக தலைவர்களிடம் எடுத்து கூறியதற்காகவும், இவ்விருது வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வாழ்வாதார அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் கிரேட்டா தன்பெர்க் 2018 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஸ்வீடன் நாடாளமன்றம் முன்பு போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது.