தருமபுரி, செப். 4- தனியார் நிதி நிறுவன ஊழியர் கள் வாகனக் கடன் கட்ட சொல்லி மிரட்டியதால் மனமுடைந்த இளநீர் வியாபாரியின் மனைவி நிதி நிறுவ னத்திலே பெட்ரோல் ஊற்றி தீக்கு ளிக்க முயன்ற சம்பவம் தருமபுரி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் அருகே உள்ள உழவன் கொட் டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன சாமி. இவர் தருமபுரி நகரில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இந் நிலையில், தனது தொழில் தேவைக் காக கடந்த 2018 ஆம் ஆண்டு சின்ன சாமி, தருமபுரியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று சரக்கு வாகனம் ஒன்றை வாங்கியுள் ளார்.
இதற்கு, மாதத் தவணையாக ரூ.17 ஆயிரத்து 250 வீதம் ஒன்பது மாதங்கள் தவணையாக செலுத்தி யுள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இளநீர் வியாபாரம் செய்ய முடியாத நிலையில், வருவாய் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த நான்கு மாதங்களாக கடனுக் கான மாதத்தவணைத் தொகை செலுத்த முடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. இதற்கிடையே, கடன் தவ னையை கட்ட சொல்லி மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி யும் நிறுவன ஊழியர்கள் மிரட்டி வந்துள்ளனர். மேலும், சின்னசாமி யின் வாகனத்தை தனியார் நிதி நிறு வன ஊழியர்கள் பறிமுதல் செய்த னர். இதனால் மனைமுடைந்த சின் னசாமியின் மனைவி ஜெயலட்சுமி வெள்ளியன்று காலை தனியார் நிறு வனத்திற்கு சென்று உடலில் பெட் ரோல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஜெயலட்சு மியை மீட்டு தருமபுரி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.