கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா (வயது 86) உயிரிழந்தார். இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார்.
பிரிட்டனின் சால்போர்டு நகரைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி ஹீடா சர்ச்சில், கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். இவர் 1918 ஸ்பானிஷ் ப்ளூ பாதிப்பிலும், 2 உலகப் போர்கள் காலத்திலும் பாதுகாப்பாக வாழ்ந்தவர். பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், ஜூன் வரை முழுமையான முடக்க நிலை மேற் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஜப்பானில் புதிதாக 68 பேருக்கு பாதிப்பு. நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 1.2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் சரிபாதி பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.
நியூயார்க் நகரை முற்றாக தனிமைப்படுத்துவது பற்றி ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ஈரானில் பரவு விகிதமும் மரண விகிதமும் தொடர்ந்து அதிகமாக நீடித்து வருகிறது.
வாடிகன் தலைமை செயலகத்தில் பணியாற்றிய முக்கிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு.
இந்திய ரயில்வேயின் அனைத்து மருத்துவமனைகளையும் கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேரளாவில் ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க காவல்துறை ட்ரோன் (ஆளில்லா) விமானங்களை பயன்படுத்துகிறது.
கொரோனா பாதிப்புக்கிடையிலும் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. இங்கு இதுவரை 18 பேருக்கு பாதிப்பும், ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்தியாவின் 90 நகரங்களில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளது என தகவல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இரா.பொ.ரவிச்சந்திரன், ரூ.5 ஆயிரத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
சென்னையிலிருந்து தனிமைப் படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 பேர் மாமரங்களில் தட்டி அமைத்து குடியேறியுள்ளனர்.