tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 8 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்... பில்கேட்ஸ் கணிப்பு

வாஷிங்டன்
கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலகப் பெரும் கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது," கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை. பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றுமே தவிர, நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பது கேள்வி குறி. கொரோனாவுக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகில் உள்ள அனைவரும் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பற்றவர்களாகத்தான்  இருப்போம்.

உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கொரோனாவுக்கான சிறந்த, பாதுகாப்பான மருந்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் "சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளி இருக்கிறது" என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிறந்த தடுப்பூசியை வேகமாகப் பெறுவதற்கு தேவையானவற்றை சரியாகத்தான் செய்து வருகிறோம்.

தடுப்பூசியை முதலில் சுகாதாரப்பணியாளர்களுக்கும் பின்னர் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்க வேண்டும்.  உலகம் முழுவதும் விநியோகிப்பதற்கு  ஏழு பில்லியன் டோஸ் மருந்து தேவைப்படலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க பதினெட்டு மாதங்கள் ஆகும் என்று  நினைப்பதாக டாக்டர் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார். இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.