வெல்லிங்டன்
கடந்த ஒருவாரம் உலகமே ஆச்சரியம் அளிக்கும் விதமாக தரமான சம்பவத்தை செய்தது நியூஸிலாந்து நாடு. அது என்னவென்றால் உலக நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், நியூஸிலாந்து நாடு அசால்ட்டாக கொரோனாவை கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்ட 1506 நோயாளிகளில் 22 உயிரை இழந்து 1482 பேரை குணப்படுத்தியது மட்டுமில்லாமல் குறுகிய காலத்தில் பச்சை மண்டலத்தை பெற்றது.
இந்நிகழ்வை பல நாடுகள் பாராட்டியது. கொரோனா நம் நாட்டை விட்டு சென்று விட்டதாக அந்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வழக்கம் போல வீதிகளில் நடமாடத் தொடங்கிய நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தனது இரண்டாம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உலகளவிலான கொரோனா அட்டவணையில் உள்ள வண்ணத்தில் பச்சை மண்டலத்தை பெற்றிருந்த நியூஸிலாந்து நாடு அதனை இழந்து வழக்கம் போல சாதாரண வண்ணத்திற்கு (வெள்ளை) உள்ளது.