tamilnadu

img

சிபிஎம் போராட்ட எதிரொலி 50 பேருக்கு மனைப்பட்டா கிடைத்தது

வேலூர், அக்.4- பேர்ணாம்பட்டு வட்டம் கார்வூர் கிரா மத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்  போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலா ளர்கள் ஸ்ரீராம், முருகேசன் இருவரும் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன்,சி.சரவ ணன், நடராஜன் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். துண்டுபிரசுரம் விநியோகத்தை பார்த்த  பேர்ணாம்பட்டு வருவாய்த்துறை அதிகாரி கள், கார்வூர் கிராமத்தில் முகாமிட்டு, சுமார்  40 பயனாளிகளுக்கு பட்டா வழங்க நிலத்தை  அளவீடு செய்தனர். இது குறித்து வட்டச் செயலாளர் பி. குண சேகரன் கூறுகையில், “வீட்டு மனைப் பட்டா  இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி  மக்களை திரட்டி இரண்டு முறை ஆர்ப்பாட்டம்  நடத்தியதால் 40 நபர்களுக்கு பட்டா வழங்க  நிலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும், மனு  செய்த 12 பேர்களுக்கும் பட்டா வழங்குவதாக வும் அதிகாரிகள் கூறினர் என்றார். இருளர் இன மக்கள் கண்ணன் குட்டை யில் 40 குடும்பத்தினரும் சகாயபுரம் பகுதி யில்  20 குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்ற னர். இந்த 60 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்காமல், அந்த இடத்தை காலி செய்யக்  கூடாது என்று வருவாய்த்துறை அதிகாரிகளி டம் வலியுறுத்தி வந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் 52 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைத்துள்ளது.  வருகிற 9 ஆம் தேதி  நடக்கும் அரசு விழாவில் பட்டா வழங்குவ தாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறிய தாகவும் வி.குணசேகரன் தெரிவித்தார்.