சென்னை, ஜன. 3- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 56 ஜெ விதியின்படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக் கூடாது, 44 தொழிலா ளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடை பெற உள்ளது. இதில் 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள டி.ஜெ. நினை வரங்கில் வெள்ளியன்று (ஜன. 3) நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரத்தினமாலா தலைமை தாங்கி னார். கூட்டத்தில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில நிர்வாகி கோபிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் டி.டெய்சி வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.தேவமணி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதில் 30 மாவட்டங்களில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு முறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களையும், அங்கன்வாடி மையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தத் திற்கு எதிராக போராடும் மாணவர்கள், பொது மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை நடவடிக்கை களை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என ரத்தினமாலா தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்ப டுத்த வேண்டும், அனைத்து காலிப் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்பவேண்டும் புதிய வேலை வாய்ப்புகளை கணிசமாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகமும் பங்கேற்பது என்று மாநில மையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம், பொதுச் செய லாளர் சேதுசெல்வம் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.